தளபதி விஜய் பிகில் படம் ப்ரான்ஸ் நாட்டில் 35 ஆயிரம் எண்ட்ரீ !!!

பிகில் தளபதி விஜய் நடிப்பில் மிகப்பிரமாண்டமாக திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து படமும் வசூலில் பல சாதனைகளை படைக்க, ப்ரான்ஸ் நாட்டில் பிகில் பிரமாண்ட சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது.

bigil-sets-new-benchmark-in-france

பிரான்ஸில் பிகில் படம் தற்போது 35 ஆயிரம் எண்ட்ரீயை கடந்து சாதனை படைத்துள்ளது, ஏற்கனவே இருந்த மெர்சலை படத்தை பின்னுக்கு தள்ளி ஆல் டைம் நம்பர் 1ஆக பிகில் இடம்பிடித்துள்ளது. மெர்சல் 32,471 ஆயிரம் எண்ட்ரீயை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

இனி இந்த சாதனையை முறியடிக்க வேண்டுமென்றால் அவை வேறு ஒரு விஜய் படமாக தான் இருக்கும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

ஏனெனில் ரஜினி கடைசியாக எந்திரன் படத்தின் மூலம் 30 ஆயிரம் எண்ட்ரீயை கடந்தார், அதை தொடர்ந்து அவரும் வேறு எந்த சாதனையையும் அங்கு படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, தர்பார் முறியடிக்குமா அல்லது தளபதி 64 முறியடிக்குமா என்பது தெரியவில்லை.

பாகுபலி-2 மொத்தமாக 25,695 எண்ட்ரீயை பெற்று இருந்தது, பொறுத்திருந்து பார்ப்போம்…

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com