வருமானவரி சோதனையில் தளபதி விஜய்க்கு பிரச்சனை இல்லை

பிகில் வசூலால் ஏற்பட்ட வருமானவரி சோதனையில் சிக்கிய தளபதியிடம் இருந்து ஒரு ரூபாய் கூட பெறவில்லை என்பது தான் உண்மை. இந்த உண்மையை வருமானவரித்துறையினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தளபதி விஜய்க்கு மக்களிடம் இருக்கும் செல்வாக்கை குறைப்பதற்காக மிரட்டுவது போன்ற இந்த செயல் உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்போது கடைசியாக வருமான வரி துறையினரிடம் மாட்டியது பைனான்சியர் அன்புச்செழியன் மட்டும்தான்.

இந்த புகைப்படத்தை தற்போது தளபதி ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் தலைசிறந்த தலைவனாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக சூழ்ச்சி செய்யப்பட்டு மிரட்டப்பட்டுள்ள இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று சீமான் கூறியது தற்போது உண்மையாகிவிட்டது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com