கோடி ரூபாய் கொடுத்தாலும் ஹீரோ வேண்டாம்: யோகிபாபு

இந்த நிலையில் தற்போது கோலிவுட்டில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் யோகிபாபு. நயன்தாராவே அவருடைய நடிப்பை ரசித்து அவரை தன்னுடைய படங்களுக்கு சிபாரிசு செய்யும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.
இந்த நிலையில் ஒருசில இயக்குனர்கள் யோகிபாபுவிடம் சென்று ஹீரோவுக்கான கதையை கூறியுள்ளனர். ஆனால் தெளிவாக இருக்கும் யோகிபாபு, கோடி ரூபாய் கொடுத்தாலும் ஹீரோ கேரக்டர் வேண்டாம், நான் கடைசி வரை காமெடியன் தான் என்று கூறி ஹீரோவுக்கான கதை சொல்ல வந்தவர்களை வழியனுப்பி வைத்துவிட்டாராம். சரியான முடிவை எடுத்துள்ள யோகிபாபு இன்னும் பல  வருடங்கள் கோலிவுட்டில் காமெடியனாக கொடிகட்டி பறப்பார் என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.
Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன