சென்னையில் நடிகையின் செல்போன் பறிப்பு

sanjana-singh

ரேனிகுண்டா, அஞ்சான், மீகாமன், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சஞ்சனா சிங், தனியார் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் சென்னை அண்ணா நகரில் வசித்து வரும் அவர், தினமும் காலை சைக்கிளிங் பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதன்படி நேற்று அதிகாலை சைக்கிளிங் செய்துள்ளார்.

அண்ணா நகர், சிந்தாமணி சிக்னலில் சஞ்சனா தனது போனை எடுத்து பார்த்துள்ளார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர், திடீரென சஞ்சனா சிங் வைத்திருந்த போனை பறித்து சென்று தப்பினார். மர்ம நபரை பிடிக்க முயன்றும் சஞ்சனாவால் முடியவில்லை.

இதனையடுத்து சஞ்சனா அண்ணா நகர் போலீசில் புகார் அளித்தார். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீஸார் செல்போன் கொள்ளையனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன