ஹீரோவாகும் எண்ணம் இல்லை

d-imman

சமீபக் காலங்களில் இசையமைப்பாளர்கள் ஹீரோவாக நடிப்பது அதிகரித்து வருகிறது. விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் ஏற்கெனவே ஹீரோவாக அறிமுகமான நிலையில் தற்போது டி.இமானும் ஹீரோவாக நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. ஆனால் இதை மறுத்துள்ள இமான் தான் ஆரோக்கியத்திற்காகத்தான் எடையைக் குறைத்ததாகவும், நடிக்கும் எண்ணம் சுத்தமாக இல்லை என்றும், இசையமைப்பதிலேயே பிசியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

டி.இமான் தற்போது அஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இவர் அஜித் படத்திற்கு இசையமைப்பது இதுவே முதன்முறையாகும்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன