தீபிகா படுகோனே – ரன்வீர்சிங் திருமணம் நவம்பரில் நடைபெறுகிறது

deepika_ranveer

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோனே. இவர் ரஜினி நடித்த கோச்சடையான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். மேலும், இவர் ஹாலிவுட்டில் நடிகர் வின் டீசலுடன் சேர்ந்து xxx என்ற படத்திலும் நடித்துள்ளார்.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நாயகனான ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வருகின்றனர். இவர்களுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தீபிகா படுகோனே – ரன்வீர்சிங் திருமண ஏற்பாடுகள் துவங்கியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தீபிகா படுகோனே – ரன்வீர் சிங் திருமணம் எப்போது நடக்கும் என்று பாலிவுட்டில் ஒரு எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில் இருவருக்கும் வருகிற நவம்பர் 19-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ரன்வீர்சிங் கூறும்போது ‘எனது திருமணம் இந்த வருடம் நடக்கும்’ என்றார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன