தனுஷ் படப்பிடிப்பில் காயம்

dhanush2 (1)

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘மாரி 2’ படப்பிடிப்பின் போது நடந்த சண்டைக் காட்சி ஒன்றில் நடிகர் தனுஷுக்கு காலில் காயம் ஏற்பட்டது.

படப்பிடிப்பு தளத்திலேயே அவருக்கு முதலுதவி அளித்த படக்குழு, பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தனுஷ் காயம் குறித்து செய்திகள் வெளியான நிலையில், தான் நலமுடன் இருப்பதாக நடிகர் தனுஷ் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனுஷ் கூறியிருப்பதாவது, `பெரிய காயம் எதுவும் இல்லை, நான் நலமுடன் இருக்கிறேன். ரசிகர்களின் அன்பு, வேண்டுதல் மற்றும் ஆதரவுக்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.

பாலாஜி மோகன் இயக்கும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். கிருஷ்ணா, வரலட்சுமி, வித்யா பிரதீப் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டோவினோ தாமஸ் வில்லனாக நடிக்கிறார்.

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன