வளைதளங்களில் பரவிய வதந்திக்கு தனுஷ் விளக்கம்

dhanush

ரஜினிகாந்தின் ‘காலா’ படம் திரைக்கு வரும் தேதிகள் ஏற்கனவே இரண்டு முறை தள்ளிப்போனது. 2.0 படம் ரிலீசான பிறகு காலாவை வெளியிட திட்டமிட்டு இருந்தனர். ஆனால் 2.0 பட கிராபிக்ஸ் வேலைகள் முடிவதில் தாமதம் ஏற்பட்டதால் காலா முன்கூட்டி வெளியாகும் என்று அறிவித்தனர். கடந்த மாதம் என்றும் இந்த மாதம் என்றும் ரிலீஸ் தேதிகள் தள்ளிக்கொண்டே போனது.

இறுதியாக அடுத்த மாதம் (ஜூன்) 7-ந் தேதி காலா வெளியாகும் என்று படத்தை தயாரித்துள்ள தனுஷ் டுவிட்டரில் கூறினார். சமீபத்தில் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவையும் சென்னையில் நடத்தி முடித்தனர். ஆனால் திடீரென்று காலா படம் அடுத்த மாதமும் வராது படத்தை விளம்பரப்படுத்தும் வேலைகளை இன்னும் தொடங்கவில்லை என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

இதை பார்த்து ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சியானார்கள். வினியோகஸ்தர்கள் தரப்பிலும் படம் வருமா? வராதா? என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்கு விளக்கம் அளித்துள்ள தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் “வதந்திகளை நம்ப வேண்டாம். காலா படம் திட்டமிட்டபடி ஜூன் 7-ந் தேதி திரைக்கு வரும்” என்று கூறியுள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *