இயக்குநர் விஜய்க்கு திருமணம்

Director-A_L_Vijay

இயக்குநர் விஜயும், நடிகை அமலா பாலும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்கள். ஆனால், திருமணம் ஆன இரண்டு ஆண்டுகளிலேயே இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததோடு, குடும்பநல நீதிமன்றம் மூலம் விவாகரத்தும் பெற்றுவிட்டார்கள்.

விவாகரத்து குறித்து நடிகை அமலா பால், எதுவும் கூறவில்லை என்றாலும் இயக்குநர் விஜய், நம்பிக்கை, நேர்மை இல்லாமல் போனது தான் பிரிவுக்கு காரணம் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து அமலா பால் நடிப்பதில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளார். தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். அதேபோல் இயக்குநர் விஜயும் அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வருகிறார்.

இதற்கிடையே, சில மாதங்களுக்கு முன்பு இயக்குநர் விஜய் இரண்டாவது திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இதை அவர் மறுத்தார்.

இந்த நிலையில், இயக்குநர் விஜய் தற்போது திருமணத்துக்கு சம்மதித்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது பெற்றோர் அவருக்கு பெண் பார்க்க தொடங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன