நான்காவது முறையாக ரஜினியுடன் இணையும் கே.எஸ்.ரவிக்குமார்

அரசியல் களத்தில் குதித்திருந்தாலும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ஷங்கர் இயக்கத்தில்  2.0 பட வேலைகள் இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி சுப்புராஜ் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அடுத்ததாக ரஜினிகாந்த் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே “முத்து”, “படையப்பா” உள்ளிட்ட ரஜினியின் வெற்றி படங்களின் இயக்குனர் என்பதால் இந்த தகவல் ரஜினி ரசிகர்களை மிகவும் உற்சாகமடைய வைத்துள்ளது. முத்து, படையப்பா, லிங்கா ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்படம் ரஜினியுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இணையும் நான்காவது படமாகும்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com