தமிழிசைக்கு பதிலடி கொடுத்த நவின்

Naveen

தமிழகத்தில் பாரதிய ஜனதாவை வலுப்படுத்தவும், பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்தும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நேற்று சென்னை வந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழகம் மழையில்லாமல் வறட்சியில் இருந்ததாகவும், அமித்ஷா வருகையால் மழை பெய்து நீர்நிலைகள் எல்லாம் நிரம்பியதாகவும் கூறினார்.

தமிழிசையின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இயக்குனர் நவின் தனது டிவிட்டர் பகக்த்தில் “ஒரு காலத்தில் கழுதைக்கு கல்யாணம் பண்ணிவச்சா மழை வரும்னு நம்பிட்டிருந்த நம்ம ஊரு மக்கள் இன்னமும் அப்படியே முட்டாளுங்களா இருப்பாங்கனு நீங்க நெனைக்கறது ரொம்ப சின்னபுள்ளதனமா இருக்கு” என டிவிட் செய்துள்ளார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன