இயக்குனர் ஆர்.தியாகராஜன் காலமானார்

R-Thiyagarajan

ரஜினிகாந்த் நடித்த ‘ரங்கா’, ‘அன்னை ஓர் ஆலயம்’ திரைப்படத்தையும், கமல்ஹாசன் நடித்த ‘ராம் லக்ஷ்மனன்’, ‘தாய் இல்லாமல் நான் இல்லை’ படங்களை இயக்கிய ஆர்.தியாகராஜன் நேற்று காலமானார். இவருக்கு வேல்முருகா என்ற மகனும், சண்முக வடிவு என்ற மகளும் உள்ளனர்.

ஆர்.தியாகராஜன் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பல படங்களை தயாரித்த சின்னப்ப தேவரின் மருமகனும் ஆவார். இவரை தேவர் பிலிம்ஸ் தியாகராஜன் என்று பலரும் அழைத்து வருவார்கள்.

இவரது இறுதி சடங்கு இன்று காலை வளசரவாக்கத்தில் உள்ள மின்சார மயானத்தில் நடக்கவுள்ளது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன