ராகுல் காந்தியை சந்தித்த ரஞ்சித்

ranjith-rahul

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை இயக்குனர் ரஞ்சித் நேற்று டெல்லியில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பைக் குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ரஞ்சித்துடன் சினிமா, அரசியல், சமூகம் சார்ந்த விஷயங்கள் குறித்து பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின் போது பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை குறித்து பேசியதாகவும், அதற்கு ராகுல் காந்தி தங்களால் எந்த தடையும் ஏற்படாது என்றும், தங்களால் ஆன உதவிகளை செய்வதாக உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில், “ ராகுலுடன் அரசியல் மற்றும் கலை, சாதி, மதம், மதரீதியான அச்சுறுத்தல்கள் பற்றி பேசினேன்” என் பதிவிட்டுள்ளார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன