அஜித் பிறந்தநாளில் சுசீந்திரன் வெளியிட்ட ருசிகர தகவல்

ajith-suseendran2

நேற்று பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அஜித்குமாருக்கு சினிமா துறையைச் சேர்ந்த பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்த நிலையில், பிரபல இயக்குநர் சுசீந்திரன், வாழ்த்துக்களோடு, அஜித் பற்றிய ருசிகர தகவல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து டிவிட்டரில் சுசீந்திரன் வெளியிட்டுள்ள பதிவில், “நான் உதவி இயக்குநராக பணியாற்றிக் கொண்டிருக்கும் போது எனது நண்பன் உதவி இயக்குநர் ரோஜா ரமணன் சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான்.

அவனது அறுவை சிகிச்சைக்கு ரூ.3 லட்சம் தேவைப்பட்டது. நானும், எனது நண்பர்களும் சேர்ந்து சினிமா துறையில் உள்ள அனைவரிடமும் பண உதவி பெற்றோம். அப்பொழுது தான் முதன் முதலில் ஜனா படத்தின் படப்பிடிப்பில் இருந்த அஜித் சாரை சந்தித்தேன்.

ரோஜா ரமணனின் நிலையை கூறினேன். அப்பொழுதே முகம் தெரியாத சகதொழிலாளிக்கு அதிக பணம் கொடுத்து உதவியவர் அஜித் சார் தான். அன்று முதல் அஜித் சார் மேல் எனக்கு பெரிய மரியாதை உண்டு. அஜித் சாருக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

ajith-suseendran

 

சுசீந்திரனின் இந்த பதிவுக்கு வரவேற்பு தெரிவித்து வரும் அஜித் ரசிகர்கள், இந்த நல்ல மனதுக்காக தான் அஜித்தை நாங்கள் கொண்டாடுகிறோம், என்று தெரிவித்துள்ளனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *