அஜித்தை இயக்கவிருக்கும் விஜய்?

ajith2

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கும் நிலையில் மற்றொரு கதாநாயகியாக காலா படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்ற நடிகை ஈஸ்வரி ராவ் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.விவேக், யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Director-A_L_Vijay

இந்நிலையில் ‘விஸ்வாசம்’ படத்தை முடித்தவுடன் ‘அடுத்த அஜித் படத்தை இயக்கப் போவது யார்?’ என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்நிலையில் அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்குனர் விஜய் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஜய் இயக்கத்தில் அஜித் கிரீடம் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன