ரஜினியுடன் இணைந்த ஃபஹத் ஃபாசில்

fahad

காலா படத்தை தொடர்ந்து தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் முடிந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு காஷ்மீர் மற்றும் காசி நகரங்களில் நடைபெற இருப்பதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். பாபி சிம்ஹா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் பிரபல மலையாள இயக்குனரும், நஸ்ரியாவின் கணவருமான ஃபஹத் ஃபாசிலும் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபஹத் ஃபாசில் ஏற்கனவே சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன