ஓவியா ஆர்மிக்கு போட்டியாக ஐந்து ஆர்மிகள்

Actress-Oviya-Photoshoot_2

கடந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பானபோது ஓவியாவுக்கு கிடைத்த வரவேற்பு வேறு யாருக்கும் கிடைக்கவில்லை. அவர் கடைசி வரை போட்டியில் இருந்திருந்தால் நிச்சயம் அவர்தான் வின்னர். ஆனால் மன அழுத்தம் காரணமாக போட்டியில் இருந்து பாதியில் விலகினார். இருப்பினும் ரசிகர்கள் அவருக்கு டுவிட்டரில் ஓவியா ஆர்மியை ஆரம்பித்து இன்னும் அதை மெயிண்டன் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த முறை அவர் விருந்தினராக கலந்து கொண்டாலும் ஓவியா ஆர்மியினர் சுறுசுறுப்பாக டுவீட்டுக்களை பதிவு செய்து அவருக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். ஆனால் நேற்று ஒரே நாளில் ஓவியா ஆர்மிக்கு போட்டியாக ஐந்து ஆர்மிகள் டுவிட்டரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாஷ்கா ஆனந்த் ஆர்மி, ஜனனி ஐயர் ஆர்மி, மும்தாஜ் ஆர்மி, ரித்விகா ஆர்மி, ஐஸ்வர்யா தத்தா ஆர்மி ஆகிய ஆர்மிகள் நேற்று நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டிருந்தபோதே ஆரம்பிக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும் எத்தனை ஆர்மிகள் வந்தாலும் ஓவியா ஆர்மிக்கு ஈடு இணை கிடையாது என்றும், இன்னும் எத்தனை பிக்பாஸ் வந்தாலும் அதில் ஓவியா இல்லாமல் எந்த பிக்பாஸ் நிகழ்ச்சியும் நடக்காது என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன