மீண்டும் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடும் ஜி.வி.பிரகாஷ்

தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடைசியாக வெளியான செம படத்திற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்ததாக குப்பத்து ராஜா, 4ஜி, ஐங்கரன், அடங்காதே, 100% காதல், சர்வம் தாள மயம், ஆதிக்குடன் ஒரு படம், ரெட்ட கொம்பு, கருப்பர் நகரம், இயக்குநர் விஜய்யுடன் ஒரு படம் என பல படங்கள் உருவாகி வருகின்றன.

இதில் ராஜுவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் `சர்வம் தள மாயம்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தில், `மெர்சல் அரசன்’ படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு குத்துப் பாடலை தான் பாடியிருப்பதாக ஜி.வி.பிரகாஷ் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் கூறியிருப்பதாவது,

` சர்வம் தாள மயம் படத்தில் `மொசார்ட் ஆஃப் இந்தியா’ ஏ.ஆர்.ரகுமானின் இசையில் அறிமுக பாடலை பாடியதில் அதீத மகிழ்ச்சி அடைகிறேன். `ஊர்வசி ஊர்வசி’ பாடலுக்கு பிறகு ஒரு `தர லோக்கல்’ பாடலாக இது இருக்கும். `மெர்சல் அரசன்’ பாடலுக்கு பிறகு ஏ.ஆர்.ரகுமான் இசையில் `பீட்டர் ஃபீட்ட ஏத்து’ என தொடங்கும் இந்த பாடலை பாடியிருக்கிறேன். இது இளைஞர்களின் அன்ந்தமாக இருக்கும் ‘ என்று கூறியிருக்கிறார்.

இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக `8 தோட்டாக்கள்’ படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார். நெடுமுடி வேணு, வினீத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மைண்ட்ஸ்கிரீன் சினிமாஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ரவி யாதவ் ஒளிப்பதிவு பணிகளையும், அந்தோணி படத்தொகுப்பு பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com