‘பார்ட்டி’ படத்தில் இணையும் ஜி.வி.பிரகாஷ் மற்றும் அனிருத்

G-V-P-Anirudh

தமிழ் சினிமாவில் தற்போது டாப் ட்ரெண்டிங்கில் உள்ள இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ் மற்றும் அனிருத். சம போட்டியாளர்களான இருவருக்கும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. இந்நிலையில் இருவரும் முதன்முதலாக ஒரு படத்தில் இணைந்துள்ளனர் என்ற தகவல் அனைவரையும் ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

வெங்கட் பிரபுவின் பார்ட்டி படத்தில் தான் இணையவுள்ளனர். வெங்கட் பிரபுவின் தம்பி பிரேம்ஜி இசையமைக்கும் இந்த படத்தின் ஒரு பாடலை நடிகர்கள் சூர்யாவும் கார்த்தியும் பாடியுள்ளனர். இந்த பாடல் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது ஜி.வி.பிரகாஷ் மற்றும் அனிருத் முறையே தல ஒரு பாடலை பாடவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன