ஹன்சிகாவின் புதிய முடிவு

Hansika-Motwani

தமிழ் பட உலகில் முக்கிய இடம் பிடித்திருப்பவர் ஹன்சிகா. இவர், பெரும்பாலும் ஹீரோக்கள் ஆதிக்கம் உள்ள படங்களிலேயே நடித்து இருக்கிறார். சமீப காலமாக நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கவே ஹீரோயின்கள் விரும்புகிறார்கள். அதுபோன்ற நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள புதிய படத்தில் ஹன்சிகா நடிக்க இருக்கிறார்.

புதிய இயக்குனர் ஜமீல் இந்த படத்தை இயக்குகிறார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது,

“ஹன்சிகா அடுத்து நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்கிறார். இது சஸ்பென்ஸ் திரில்லர் படம். இதுவரை இவர் நடிக்காத புதிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே ஹன்சிகா கவர்ச்சி, காமெடி, குடும்ப பாத்திரங்களில் நடித்திருந்தாலும் இது அவருக்கு புதிய அவதாரமாக இருக்கும். அனைத்து அம்சங்களும் கொண்ட படமாக உருவாக இருக்கிறது. நிச்சயம் அவருக்கு இது திரை உலக பயணத்தின் முக்கிய திருப்பமாக அமையும்.

இந்த படம் இந்தியாவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் படமாக இருக்கிறது. இந்த கதையை மும்பை சென்று ஹன்சிகாவிடம் சொன்னேன். கேட்டவுடன் கதை பிடித்திருப்பதாக கூறி நடிக்க ஒப்புக்கொண்டார். ஜியோ ஸ்டார் எண்டர்பிரைசர்ஸ் நிறுவனம் சார்பில் இந்த படத்தை கோடீஸ்வர ராஜு தயாரிக்கிறார். நான் ‘மசாலா படம்‘, ‘ரோமியோ ஜூலியட், ‘போகன்’ படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்திருக்கிறேன். மும்பையில் பல விளம்பர படங்களை இயக்கி இருக்கிறேன். இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறேன். விரைவில் படத்தின் பெயர் மற்றும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் வெளியாகும்” என்றார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *