ரைசாவுடன் இணைய இதுதான் காரணம் – ஹரிஷ் கல்யாண்

harish-raiza2

பிக் பாஸ் மூலம் புகழ் பெற்ற ஹரிஷ் கல்யாண் – ரைசா நடிப்பில் உருவாகியுள்ள படம் `பியார் பிரேமா காதல்’. புதுமுக இயக்குனர் இளன் இயக்கியுள்ள இப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ‘கே புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர். காதல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படம் இன்று வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது

இந்நிலையில் படக்குழுவினர் சிறப்பு பேட்டி அளித்தனர். அப்போது, படத்தின் நாயகன் ஹரிஷ் கல்யாண் பேசும் போது, “பிக்பாஸ் முடித்து வெளியே வந்த பிறகு நானும், ரைசாவும் ஒரு செல்ஃபி எடுத்தோம். அந்த செல்ஃபி சமூக வலைதளங்களில் வைரலாகியது. அதுதான் நாங்கள் இருவரும் இணைந்து நடிக்க காரணம்.

harish-raiza

இந்த படத்தில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்துள்ளன. இயக்குநர் இளனும் பாடல்களை எழுதியிருக்கிறார். பியார் பிரேமா காதல் படத்தின் தலைப்பு சிம்புவின் வரிகள் என்பதால், அவரிடம் படத்தின் தலைப்பு வேண்டும் என்று கேட்டேன். அவர், என்னிடம் இருந்து உனக்கு ஏதாவது உதவும்படியாக இருந்தால், எனக்கு சந்தோஷம் தான் என்றார். சிம்பு தான் என் தலைவர். அரசியலுக்கு வர அவருக்கு விருப்பம் இல்லை. ஆனால் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர் நினைக்கிறார். நல்லதே நடக்க வேண்டும் என்று நினைப்பவர். அதை தான் செய்யவும் விரும்புவார்” என்று கூறினார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன