‘விஸ்வரூபம்-2’ படத்திற்கு தடை கோரிய மனு தள்ளுபடி

viswaroopam2

நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படம் இன்று வெளியாகிறது. இதன் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. கமல் அரசியல் கட்சி ஆரம்பித்த பின் வெளியாகும் முதல் படம் என்பதால் அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழக மக்களிடமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் படத்திற்கு எதிராக பிரமிட் சாய்மீரா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மனுவில் தங்களிடம் ’மர்மயோகி’ படத்திற்காக பணம் வாங்கிய கமல்ஹாசன், அதை வேறு படத்திற்கு பயன்படுத்தி விட்டதாகவும், எனவே அந்த பணத்தை திருப்பி தரும் வரை ‘விஸ்வரூபம் 2’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், கமல்ஹாசன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பிரமிட் சாய்மீரா நிறுவனம் ரூ.4 கோடி மட்டுமே கொடுத்ததாகவும், அந்த பணம் மர்மயோகி படத்தின் ஆரம்பகட்ட பணிகளுக்கு செலவிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

மர்மயோகி படத்துக்கு வேறு தயாரிப்பாளர் கிடைத்ததும் அந்த பணத்தை திருப்பி வழங்கிவிடுவதாக கமல்ஹாசனின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து, விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிக்க முடியாது என கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன