“வில்லனாக நடிக்க வேண்டாம் என்று நினைத்தேன்” – பாபி சிம்ஹா

Bobby-Simha

‘வில்லனாக நடிக்க வேண்டாம் என்று நினைத்தேன்’ என பாபி சிம்ஹா தெரிவித்துள்ளார்.
ஹரி இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘சாமி ஸ்கொயர்’. ஏற்கெனவே ரிலீஸான ‘சாமி’ படத்தின் தொடர்ச்சியாக இது உருவாகி வருகிறது. விக்ரம் ஹீரோவாக நடிக்க, கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார். மேலும், பாபி சிம்ஹா, ஜான் விஜய் எனப் பலரும் நடிக்கின்றனர். இதில், பாபி சிம்ஹா விக்ரமுக்கு வில்லனாக நடிக்கிறார். அதுவும் மூன்று கெட்டப்களில்.

“வில்லனாக நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்துப் பல நாட்களாகிவிட்டது. ஆனால், நட்புக்காக ‘கருப்பன்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடித்தேன். அடுத்து, ஹரி சார் கேட்டபோதும் வேண்டாம் என்றுதான் சொன்னேன். ஆனால், ‘கதையைக் கேட்டுவிட்டு முடிவு செய்யுங்கள்’ என்றார் ஹரி. கதையைக் கேட்டபிறகு என்னால் ஓகே சொல்லாமல் இருக்க முடியவில்லை. வழக்கமான வில்லன்களைப் போல இல்லாமல், வித்தியாசமாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார் ஹரி” என்கிறார் பாபி சிம்ஹா.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன