தெலுங்கில் வசூலை அள்ளும் விஷாலின் இரும்புத்திரை

vishal_samantha

சமீபகாலமாக தமிழ் படங்களுக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் உருவாகி வருகிறது. சூர்யா, விஷால், கார்த்தி, விஜய் ஆண்டனி ஆகியோரது படங்கள் இரண்டு மொழிகளையும் குறி வைத்தே எடுக்கப்படுகின்றன. கடந்த மாதம் வெளியான விஷாலின் இரும்புத்திரை தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

படத்தில் அர்ஜுன், சமந்தா, ரோபோ சங்கர் ஆகியோர் நடித்து இருந்தார்கள். அறிமுக இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கி இருந்தார். தமிழில் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற இரும்புத்திரை தெலுங்கில் அபிமன்யுடு என்ற பெயரில் கடந்த வாரம் வெளியானது.

இந்த படம் தெலுங்கில் நேரடியாக வெளியான படங்களைவிட வசூலில் முந்தி இதுவரை 12 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. அபிமன்யுடு வெளியான திரையரங்குகளில் அரங்கு நிறைந்து ஓடிக்கொண்டிருப்பதால் படம் அங்கும் பிளாக்பஸ்டர் வெற்றி அடையும் என நம்புகிறார்கள். எல்லா மொழிகளிலும் சேர்த்து மொத்தமாக இதுவரை 60 கோடியை வசூலித்துள்ளது இரும்புத்திரை

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன