ஸ்ரீதேவிக்கான தேசிய விருதை பெற்றுக் கொண்ட கணவர் மற்றும் மகள்கள்

national_award_sridevi

65-வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டன. அதன்படி விருது வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது.

வழக்கமாக தேசிய விருதுகளை நாட்டின் ஜனாதிபதி தான் வழங்குவார். ஆனால், இந்த முறை அடையாளமாக 11 பேருக்கு மட்டுமே ஜனாதிபதி விருது வழங்குவார் என்றும், மற்றவர்களுக்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி ஸ்மிருதி இராணி விருதுகளை வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து விருதுகளை வென்ற கலைஞர்கள் 68 பேர் விழாவை புறக்கப்பணிப்பதாக அறிவித்தனர். இதையடுத்து விழாவை புறக்கணித்தவர்களுக்கான இருக்ககைகள் நீக்கப்பட்டது. இந்த தகவல் திரையுலகினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தின.

இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், கே.யேசுதாஸ், ஸ்ரீதேவி குடும்பத்தினர், வினோத் கண்ணா குடும்பத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய விருதை வழங்கினார். இதில் ஸ்ரீதேவிக்கான விருதை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

மாம் படத்திற்காக ஸ்ரீதேவிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *