பிரதமர் ஆக ஆசைப்படும் ஸ்ரீதேவி மகள்

Jhanvi-kapoor

மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜானவி கபூர் தற்போது இந்தி சினிமாவில் அறிமுகமாகி தடக் படத்தில் நடித்து வருகிறார். இம்மாதம் வெளியாகியுள்ள இப்படத்தில் நடிகர் இஷான் கட்டார் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படம் அனைத்து தரப்பினரிடமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் படத்தின் கதாநாயகன் மற்றும் கதாநாயகியான இஷான் கட்டாரும், ஜானவி கபூரும் கலந்துகொண்டனர். அப்போது உங்கள் இருவரில் யார் பிரதமர் ஆவீர்கள் என்று கேட்கப்பட்ட போது ஜானவி உடனே தான் பிரதமர் ஆவேன் என்று கூறினார். இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. பின் தான் விளையாட்டுக்கு கூறியதாக ஜானவி தெரிவித்தார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன