ஜோதிகா ஆடும் ‘ஜிமிக்கி கம்மல்’

இயக்குனர் ராதாமோகனின் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காற்றின் மொழி’. ‘மொழி’ படத்திற்கு அடுத்து ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் இரண்டாம் படம் இதுவாகும். இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் ஒரே ஷெட்யூலில் முடிவடைந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றி பெற்று வைரலாகி பட்டி தொட்டியெங்கும் ஒலித்த ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல் இப்படத்திலும் இடம்பெற்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நடன இயக்குனர் விஜியின் நடன வடிவமைப்பில் ஜோதிகா, லட்சுமி மஞ்சு, சிந்து ஷியாம் மற்றும் ஆர்.ஜெ சான்ட்ரா இப்பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.

kaatrinmozhi1

பாப்டா மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் நிறுவனம் சார்பில் ஜி. தனஞ்ஜெயன், லலிதா தனஞ்ஜெயன், விக்ரம்குமார் ஆகியோர் தயாரிக்கும் இப்படத்தில் விதார்த், லட்சுமி மஞ்சு ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஜோதிகாவின் பிறந்தநாளான அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீசாகும் இப்படத்தில் நடிகர் சிம்பு கௌரவ வேடத்தில் நடித்துள்ளார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன