ஜுங்கா ரிலீஸ் தேதி அறிவிப்பு

Junga

நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் தயாரிப்பில், இயக்குநர் கோகுல் இயக்கத்தில், விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜுங்கா. இப்படத்தில் கதாநாயகியாக மடோனா மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ள நிலையில் யோகிபாபுவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

படத்தின் தயாரிப்பாளரான அருண் பாண்டியனின் பிறந்தநாள் விழா நேற்று சென்னையில் நடந்தது. ஜுங்கா படக்குழுவினர் இவ்விழாவில் கலந்து கொண்டனர். மடோனா செபாஸ்டின், சரண்யா பொன்வண்ணன், சுரேஷ் மேனன், இசையமைப்பாளர் சித்தார்த் விபின் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இவ்விழாவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. இம்மாதம் 27 ஆம் தேதியன்று இப்படம் வெளியாகும் என்று விஜய் சேதுபதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன