இயக்குனர் விசு மீது பாக்யராஜ் காவல்துறையில் புகார்

bhakyaraj-visu

குடும்பப்பாங்கான திரைப்படங்கள் எடுத்து வெற்றி பெற்று மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்ற விசு தமிழ் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று நடிகர் பாக்கியராஜ் தலைவராக பதவியேற்றுள்ளார். தற்போது முன்னாள் தலைவர் விசு மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பாக்கியராஜ் நலிந்த எழுத்தாளர்களின் கல்வி மற்றும் மருத்துவ உதவிகளுக்காக தொடங்கப்பட்ட அறக்கட்டளை குறித்து தெரிந்து கொள்வதற்காக விசுவைத் தொடர்புக் கொண்ட போது வயதானதால் அறக்கட்டளை நிர்வாகத்தை தான் கவனிக்கவில்லை என்றும், பிறைசூடன் கவனித்ததாகவும் அவரை தொடர்பு கொள்ளும்படியும் கூறியதாகவும், ஆனால் பிறைசூடன் சரியான தகவல்களை தெரிவிக்க மறுப்பதாகவும், அதனால் காவல் துறையில் புகார் அளித்ததாகவும் கூறினார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன