காலா இசை வெளியீட்டு விழா

rajinikanth-kaala-audio-launch

ரஜினிகாந்த் நடிப்பில் ‘காலா’ படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் பா.இரஞ்சித், படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட படக்குழுவினர் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

kaala_audio_launch

ரஜினி ரசிகர்கள் புடைசூழ கோலகலமாக தொடங்கிய காலா இசை வெளியீட்டு விழாவிற்கு ரஜினிகாந்த் காலா படத்தில் தோன்றுவது போலவே முழுவதுமாக கருப்பு நிற உடை அணிந்து வந்தார். படத்தின் உருவாக்க வீடியோவுடன் இசை வெளியீட்டு துவங்கி நடைபெற்றது.

பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் இந்த படம் மும்பையை பின்னணியில் உருவாகி இருக்கிறது. தனுஷ் தனது வுண்டர்பார் பிலம்ஸ் மூலம் படத்தை தயாரித்துள்ளார்.

முன்னதாக படத்தின் பாடல்கள் நேற்று காலையே அனைத்து விதமான டிஜிட்டல் தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *