ஜெயம் ரவியுடன் இணையும் காஜல் அகர்வால்

jayam-ravi-kajal

ஜெயம் ரவி நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற தனி ஒருவன் படம் இன்றுடன் மூன்றாம் ஆண்டை நிறைவு செய்கிறது. இதனையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராகவிருக்கிறது. ஜெயம் ரவி அண்ணன் மோகன்ராஜா இயக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவிருக்கிறார்.

ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த ‘போகன்’ திரைப்படத்தில் காஜல் அகர்வால் நடிக்க விருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் அப்போது கால்ஷீட் உள்ளிட்ட ஒரு சில காரணங்களால் அவரால் அந்தப் படத்தில் நடிக்க முடியாததால் அவருக்குப் பதிலாக ஹன்சிகா நடித்தார். தற்போது தனி ஒருவன்-2 படம் மூலம் ஜெயம் ரவியுடன் இணைய இருக்கிறார் காஜல் அகர்வால்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன