காஜல் அகர்வால் வழக்கு தள்ளுபடி

kajal-agarwal

தமிழ்நாட்டைச் சேர்ந்த விவிடி & சன்ஸ் தேங்காய் எண்ணெய் நிறுவனம், 2008ஆம் ஆண்டு காஜல் அகர்வாலை வைத்து ஒரு விளம்பரப் படம் எடுத்தது. அந்த விளம்பரத்தை, காண்ட்ராக்ட் முடிந்தும் அந்த நிறுவனம் பயன்படுத்தி வந்தது.

இதனால் காஜல் அகர்வால் ரூ.2.50 கோடி இழப்பீடு கேட்டு அந்த நிறுவனத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், காப்புரிமைச் சட்டத்தின்படி ஒரு விளம்பர படத்தின் உரிமையானது 60 ஆண்டுகள் வரை அந்த நிறுவனத்துக்கே சொந்தமானது எனக் கூறி கடந்த ஆண்டு இந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.

இதனையடுத்து, காஜல் அகர்வால் எண்ணெய் நிறுவனத்துக்கு எதிரான வழக்கை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இரு தரப்பு வாதங்களையும் கேட்டு மேல்மூறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன