கலைஞர் உடல்நலம் தேறி வருகிறார் – மு.க.ஸ்டாலின்

karunanidhi

திமுக வின் தலைவரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான கலைஞர் திரு.மு.கருணாநிதி 95 வயதான நிலையில், உடல்நிலை காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசியலில் இருந்து ஒதுங்கி ஓய்வெடுத்து வருகிறார். தனது கோபாலபுரம் இல்லத்திலேயே மருத்துவ சிகிச்சை எடுத்துவரும் கலைஞர் அவ்வப்போது காவேரி மருத்துவமனைக்கு சென்று வருவார்.

இந்நிலையில் சுவாசித்தலில் பிரச்சனை ஏற்பட்டதால் சமீபத்தில் காவேரி மருத்துவமனையில் ட்ரக்கியாஸ்டமி சிகிச்சை எடுத்துக் கொண்டார். பின் வீடு திரும்பிய கருணாநிதிக்கு நேற்று சிறுநீரகத் தொற்று காரணமாக காய்ச்சல் ஏற்பட்டதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதனையடுத்து தொண்டர்கள் கலைஞர் வீடு முன்பு திரண்டனர். ஓபிஎஸ், திருமாவளவன், கமல்ஹாசன் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் கோபாலபுரம் வந்து கலைஞரின் உடல்நலம் குறித்து விசாரித்து சென்றனர்.

தொடர்ச்சியாக அனைத்து தலைவர்கலும் கலைஞர் இல்லத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் கலைஞர் இருந்து வரும் நிலையில், அவரது காய்ச்சல் குறைந்து உடல்நலம் தேறி வருவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன