கமல் பட ஒளிபரப்பை நிறுத்தும் கலைஞர் டிவி

Kamal-hassan

நடிகர், இயக்குனர், பாடகர் இப்படி பலமுகங்கள் கொண்ட கமல்ஹாஸன் கடந்த 1986 ஆம் ஆண்டு ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் விக்ரம் படத்தை தயாரித்து தயாரிப்பாளராக அறிமுகமானார். அதன்பின் சத்யா, தேவர்மகன், விருமாண்டி, உன்னைப்போல் ஒருவன், விஸ்வரூபம் உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார்.

இப்படத்தின் ஒளிபரப்பு உரிமைகள் கலைஞர் டிவிக்கே தரப்பட்டிருந்தன. இந்நிலையில் கலைஞர் டிவியுடனான ஒப்பந்தம் முடிவடைந்ததையடுத்து பட ஒளிபரப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கமல் தற்போது விஜய் டிவியுடன் நெருக்கமாக இருப்பதால் படத்தின் ஒளிபரப்பு உரிமைகள் விஜய் டிவிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன