ட்விட்டரில் பிக்பாஸ் 2 டீசர் வெளியிட்ட கமல்

big-boss-2

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆண்டு ஒளிபரப்பாகி மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சி மூலம் ஓவியா, ஆரவ், ஜுலி என பலர் பிரபலம் ஆனார்கள். இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் துவங்கவிருக்கிறது. கமல்ஹாசனே இதனை தொகுத்து வழங்க உள்ளார். கடந்த 3 ஆம் தேதி நிகழ்ச்சியின் டீசருக்கான படப்பிடிப்பு ஏவிஎம் அரங்கில் நடந்தது.

ஜுன் 25 முதல் செப்டம்பர் 30 வரை ஒளிபரப்பாகவிருக்கிறது. இந்த பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சிகள் பிரம்மாண்டமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சிக் குழு. பிக்பாஸ் 2 டீசரை கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் மீண்டும் என் மக்களைச் சந்திக்க வருகிறேன் என்றும், #உங்கள்நான் என்றும் பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/i/web/status/995264883263336448

 

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *