இந்தியன் 2 குறித்து கமல்ஹாசன் அறிவிப்பு

kamal-haasan-afp_650x400_61505461419

நடிகர் கமல் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் 2 ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருக்கிறது. கமல் அரசியலில் இறங்கியப் பின் வெளியாகும் படம் என்பதால் இப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் அரசியல் பயணங்களிலும், பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் மிகவும் பிஸியாக இருக்கிறார்.

இந்நிலையில் அவர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடிப்பதும், அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதும் உறுதியாகியுள்ளது. எனினும் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்பது குறித்து எந்தவொரு அறிவிப்பும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவர் கமலிடம் இந்தியன் 2 எப்போது துவங்கும் என்று கேட்டதற்கு பிக் பாஸ் 2 முடிந்தவுடன் இந்தியன் 2 துவங்கும் என்று கூறினார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன