வதந்திகள் குறித்து கமல்ஹாசன் கவலை

kamal-haasan

திருவள்ளூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் வடமாநில கடத்தல் கும்பல் நடமாடுவதாகவும், 200 பேர் வரை ஊடுருவி இருப்பதாகவும் வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்ற இணையதங்களில் தகவல் பரவியது.

இதனால் பீதி அடைந்த கிராம மக்கள், தங்கள் பகுதியில் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் யாராவது நடமாடினால் அவர்கள் குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று கருதி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதில் அப்பாவிகள் பலியாகி வருவதால் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதுடன் தீவிர நடவடிக்கையிலும் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் அவரது டுவிட்டர் பக்கத்தில் வதந்திகள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடியவையாக இருப்பது கவலையளிக்கிறது என்று கூறியுள்ளார். இதுகுறித்து கமல் தெரிவித்திருப்பதாவது,

`வதந்திகள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடியவையாக இருப்பது கவலையளிக்கிறது. மக்கள் விழிப்புடன் இருப்பதோடு பொறுப்புடன் இருப்பதும் முக்கியம். சட்டத்தை கைகளில் எடுத்துக்கொண்டு செயல்படுவது பொறுப்புள்ள குடிமக்களின் அடையாளமன்று. காவல்துறையிடம் தெரிவிப்பதே நமது பொறுப்பும் கடமையும் ஆகும்’

இவ்வாறு கூறியிருக்கிறார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *