‘விஸ்வரூபம் 2’-வுக்கு எதிர்ப்பு வந்தால் அரசியல்வாதியாக எதிர்கொள்வேன் – கமல்

kamal-haasan

கமல்ஹாசன் நடித்து இயக்கி தயாரித்திருக்கும் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. தமிழ் பதிப்பின் டிரைலரை ஸ்ருதி ஹாசன் வெளியிட, இந்தி டிரைலரை அமீர்கானும், தெலுங்கு டிரைலரை ஜூனியர் என்.டி.ஆரும் வெளியிட்டார்கள்.

சென்னையில் நடைபெற்ற டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட கமலிடம், ’விஸ்வரூபம்’ படத்திற்கு பல எதிர்ப்புகள் வந்தது, அதுபோல ‘விஸ்வரூபம் 2’ வுக்கு வந்தால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டதற்கு, “அதுமாதிரி எதுவும் வராதுனு நினைக்கிறேன். முதல்ல வந்தது வேற ஒரு பெயரில் உருவம் மாற்றி மாறு வேடத்தில் வந்த எதிர்ப்புதான். அந்த எதிர்ப்பு பிற்பாடு அவர்களிடமிருந்து வரவில்லை. இப்போதும் அப்படித்தான். அது அரசியல். இதிலும் அரசியல் வந்தால், எதிர்கொள்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் நான் செய்திருக்கிறேன். அரசியல்வாதியாக வரும் பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு நான் தயாராக உள்ளேன். இது, `விஸ்வரூபம்’ முதல் பாகத்தின் தொடர்ச்சியாக மட்டும் இருக்காது. முன்கதையும் இந்தப் படத்தில் இருக்கிறது. யார் இந்த விஸாம் அஹமது காஷ்மிரி என்பதை விளக்கும் கதையாகவும் இந்தப் படம் இருக்கும்.” என்றார்.

விரைவில் வெளியாக உள்ள ‘விஸ்வரூபம் 2’ படத்தை உலகம் முழுவதும் சுமார் 900 திரையரங்குகளில் வெளியிட கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன