பிக் பாஸ் வீட்டுக்குள் கார்த்தி

karthi

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகியுள்ள படம் “கடைக்குட்டி சிங்கம்”. இன்று வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் படக்குழுவினர் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளனர். நடிகர் கார்த்தி, சூரி மற்றும் இயக்குனர் பாண்டிராஜ் ஆகியோர் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளனர்.

இதனுடைய புரோமோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து வெளியே மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்ற போட்டியாளர்களின் கேள்விக்கு, அனைவரும் நடிப்பதாக மக்கள் நினைப்பதாகவும்,உண்மையான முகத்தை காட்டுங்கள் என்றும் கார்த்தி கூறியுள்ளார். மேலும் உங்களை மன்னிக்கவே முடியாது, இங்கு சுத்தமே இல்லாமல் இருக்கிறீர்கள், எல்லோரும் பார்க்கிறார்கள் என்று கார்த்தி பேசுவது போன்ற காட்சிகளும் வெளியாகியுள்ளது.

 

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன