பிரம்மாண்டமாக உருவாகும் ‘தேவ்’

karthi

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கார்த்தி தனது அடுத்தப் படத்தில் பிஸியாகியுள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘தேவ்’ என்றுதலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குந ரஜத் ரவிஷங்கர் இயக்கும் இப்படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக உருவாக உள்ளது. ‘சிங்கம் 2’, விரைவில் வெளியாக உள்ள திரிஷாவின் ‘மோகினி’ ஆகியப் படங்களை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்திருக்கும் எஸ்.லக்‌ஷ்மன், ‘தேவ்’ படத்தை சுமார் 55 கோடி ரூபாய்க்கு மேலான பட்ஜெட்டில் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.

ஆக்‌ஷன், காமெடி, அட்வென்ஜர் கலந்து உருவாகும் இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு சென்னையில் விரைவில் தொடங்க உள்ளது. அதனையடுத்து, இமாலய மலைகள், மும்பை, ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் பல அழகிய இடங்களிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் படத்தொகுப்பு செய்ய, அன்பரீவ் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்கின்றனர்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன