தமிழ் நாட்டிற்கு தலைவன் ஆகும் தகுதி உடையவரா ரஜினி – அலசி ஆராயும் கரு.பழனியப்பன் (Karu.Palaniappan)

karupalaniappan-rajini

ரஜினிகாந்த், எம்ஜிஆர் முகமூடியை அணிந்து கொண்டு அரசியலுக்கு வருவது ஏன்? என்று இயக்குனர் கரு.பழனியப்பன் கேள்வி விடுத்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, எம்ஜிஆர் அரசியலுக்கு வரும்போது தனித்தன்மையுடன் வந்தார். ஆனால் ரஜினியோ எம்ஜிஆரின் முகமூடியை அணிந்து கொண்டு அரசியலுக்கு வருகிறார்.

நீங்கள் ரஜினியாகவே அரசியலுக்கு வாருங்கள். மேலும், வெற்றிடத்தை நிரப்ப அரசியலுக்கு வருவதாக சொல்கிறீர்கள். எம்ஜிஆர் வரும்போது எந்த வெற்றிடமும் இல்லை. ஆனால் தனக்கென ஒரு இடத்தை அவர் உருவாக்கிக்கொண்டார். அதோடு ஆன்மீக அரசியல் என்றால் சாதி, மத, இன பேதமற்ற அரசியல் என்கிறீர்கள். ஆனால் ஜாதி அரசியலை நடத்தி வரும் ஏ.சி.சண்முகத்தை பக்கத்தில் வைத்துக்கொண்டு இது எப்படி சாத்தியமாகும்.

எம்.ஜி.ஆர் பற்றி பல்வேறு கருத்து கிடையாது. ஆனால், அவருடைய ஆட்சி பற்றி பல்வேறு கருத்து உண்டு. அதில் இரண்டு விஷயங்கள் 1984இல் டாஸ்மாக் மது கடைகள் மற்றும் பொருளாதார இட ஒதுகிடு.

இப்படி பல கருத்துகளை கூறியுள்ள கரு.பழனியப்பன், நீங்கள் நடித்துள்ள காலா படம் வந்தால் முதல் ஆளாக படம் பார்ப்பேன். நீங்கள் அரசியலுக்கு வாருங்கள், வரவேண்டாம் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் என் ஓட்டு யாருக்கு என்பதை நான்தான் முடிவு செய்வேன். இவ்வாறு கரு.பழனியப்பன் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *