இயக்குனரும், நடிகர் தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் உருவாகும் படம் ‘பாண்டிமுனி’. த்ரில்லர் கலந்த ஹாரர் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கோத்தகிரி, ஊட்டி பகுதிகளில் நடைபெற்றது. கதாநாயகனாக ஆசிப் என்ற மாடல் அறிமுகமாகிறார். நாயகிகளாக மேகாலி, ஜோதி, வைஷ்ணவி, யாஷிகா ஆகியோர் அறிமுகமாகிறார்கள். ஜாக்கி ஷெராப் அகோரி வேடத்தில் நடிக்கும் இந்தப்படத்தில் ஷாயாஜி ஷிண்டே முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
பனகுடிசோலை என்கிற இடத்தில் குட்டஞ்சாமி கோயில் உள்ளது. அப்பகுதி மக்களின் தெய்வமான அக்கோவிலை சுற்றி படப்பிடிப்பு நடந்தது. அப்போது படப்பிடிப்பு ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே நாயகி மேகாலிக்கு சாமி வந்து ஆட ஆரம்பித்து விட்டதாகவும், ஊர்க்காரர்கள் ஒன்று கூடி பரிகார பூஜை செய்த பிறகே சாமியாட்டம் நின்றதாகவும் படத்தின் இயக்குனரான கஸ்தூரி ராஜா தெரிவித்தார்.