ஜெயலலிதா வேடத்தில் நடிப்பது சவாலானது – கீர்த்தி சுரேஷ்

jj-keerthi

சினிமாவிலும், அரசியலிலும் மிகப்பெரிய வெற்றி பெற்று, தமிழகத்தின் தனிப்பெரும் தலைவராகத் திகழ்ந்து, ‘இரும்பு பெண்மணி’ என அழைக்கப்பட்டவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள். இவர் மறைந்தப் பின் இவரது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க பல இயக்குனர்கள் முயற்சி எடுத்தனர். இவரது வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க பல்வேறு முன்னணி நடிகைகள் விருப்பம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க இருப்பதாக மூன்று தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஏ.எல்.விஜய், பாரதிராஜா போன்ற பிரபல இயக்குனர்கள் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயலலிதா வேடத்தில் நடிக்க நயன்தாரா, த்ரிஷா, கீர்த்திசுரேஷ் உள்ளிட்ட முன்னணி நடிகைகளின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து கீர்த்தி சுரேஷிடம் கேட்டதற்கு “ஜெயலலிதா அவர்களின் வரலாற்றுப் படத்தைத் தயாரிப்பது மட்டுமில்லாமல் அந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது என்பது கடினமான மற்றும் சவாலான வி‌ஷயம். எனக்கு அந்த அளவுக்குத் தைரியம் இல்லை. அதனால் நான் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை” என்று கூறினார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன