கதைக்கு தேவைப்பட்டாலும் முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் – கீர்த்தி சுரேஷ்

keerthi-suresh

‘நடிகையர் திலகம்’ படத்திற்கு பிறகு தென்னிந்தியாவின் முக்கியமான நடிகையாகியுள்ள கீர்த்தி சுரேஷ், விஜய், சூர்யா, விக்ரம் என்று முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே, நடிகையர் திலகம் படத்தின் மூலம் தனது நடிப்பு கிடைத்த பாராட்டால் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கவும் முடிவு செய்துள்ளாராம்.

தற்போது ‘சர்கார்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “அதிர்ஷ்டம் மீது எனக்கு நம்பிக்கை உண்டு. என்னை விட அழகும், திறமையும் உள்ள பல நடிகைகள் திரையுலகில் இருந்தும் எனக்கு நல்ல கதைகளும் கதாபாத்திரங்களும் அமைவதற்கு எனது அதிர்ஷ்டம் தான் காரணம். கதைகளை தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறேன். முத்த காட்சியில் நடிக்க விருப்பம் இல்லை. முத்த காட்சியில் நடிக்க மாட்டேன் என்றதால் சில பட வாய்ப்புகள் கைநழுவி போய்விட்டன. எனக்கு சவுகரியமாக இல்லாத கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன். கதைக்கு தேவையாக இருந்தாலும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்” என்று கூறினார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன