சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கீர்த்தி சுரேஷ்

siva-keerthi

சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன் நடிப்பில் உருவாகும் படம் ‘சீமராஜா’. தென்காசி, குற்றாலம் பகுதிகளில் வளர்ந்த ‘சீமராஜா’ படம் தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த காட்சிகளுக்காக சிவகார்த்திகேயன் இதுவரை நடிக்காத புதிய தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இந்த தோற்றத்துக்காக தாடி வளர்த்து வருகிறார். ப்ளாஷ்பேக்கில் இடம்பெறவுள்ள இந்த தோற்றம் இன்னொரு கதாபாத்திரமாக இருக்கலாம் என்கிறார்கள். இந்த ப்ளாஷ்பேக் காட்சியில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

விரைவில் இதன் படப்பிடிப்பை முடித்து பின்னணி வேலைகளில் ஈடுபட இருக்கிறார்கள். இதனையடுத்து, டீசர், டிரைலர்கள் வெளியிட இருக்கிறார்கள். பொன்ராம், சிவகார்த்திகேயன் கூட்டணியில் வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’ படங்கள் நல்ல வரவேற்பு பெற்றதால், இப்படத்தின் மீது அதிக எதிர்ப்பார்ப்பு நிலவி உள்ளது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன