விவேக் படத்தை பாராட்டிய கேரளா அமைச்சர்

ezhumin

விளையாட்டை மையமாக வைத்து தயாரிப்பாளர் வி.பி.விஜி தயாரித்து இயக்கி இருக்கும் திரைப்படம் ‘எழுமின்’. விவேக், தேவயானி உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருக்கும் இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

ezhumeen

இப்படத்தின் ட்ரைலரைப் பார்த்த கேரள விளையாட்டு மற்றும் இளைஞர்கள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஏ.சி.மொய்தீன் மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களின் உள்துறை செயலாளர் எம்.வி.ஜெயராஜன் ஆகியோர் படக்குழுவினரை அழைத்து பாரட்டியுள்ளார்கள். மேலும் இது போன்ற சமூகக் கருத்துள்ள படங்களை அதிகம் எடுக்க வேண்டும் என்று தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன