விஜய்க்கு ஜோடியாகும் கியாரா அத்வானி

vijay-kiara

நடிகர் விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘சர்கார்’ படத்தில் நடித்து வருகிறார். இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். நடிகர் ராதாரவி மற்றும் பழ.கருப்பையா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அரசியல் படம் என்று கூறப்படுவதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ‘சர்கார்’ படத்திற்குப் பின் விஜயின் 63 ஆவது படத்தை அட்லீ இயக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான ‘தெறி’, ‘மெர்சல்’ படங்கள் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அட்லீ விஜயிடம் கதை ஒன்றை கூறியுள்ளதாகவும், அந்த கதை விஜய்க்கும் பிடித்துள்ளதால் இருவரும் மீண்டும் இணையவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க எம்.எஸ்.தோணி, பரத் அனே நேனு ஆகிய படங்களில் நடித்த பாலிவுட் நடிகை கியாரா அத்வானியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் மெர்சல், சர்கார் படத்தை அடுத்து இந்த படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. சர்கார் படப்பிடிப்பு முடிந்த பிறகே, விஜய்யின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ  அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன