கோலமாவு கோகிலா ரிலீஸ் தேதி அறிவிப்பு

koko

சமீப காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வரும் நயன்தாரா சமீபத்தில் நடித்துள்ள படம் “கோலமாவு கோகிலா”. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, ஜாக்குலின் உள்பட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் பாடலாசிரியராக அறிமுகமாகியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் மூலம் இயக்குனர் விக்னேஷ் சிவன் பாடகராக களமிறங்கியுள்ளார். இப்படத்திலிருந்து சமீபத்தில் வெளியிடப்பட்ட “கல்யாண வயசு” பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஏறத்தாழ 3 கோடி பேர் யூடியூபில் இவ்வீடியோவை பார்த்தனர்.

படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேடி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன