சிம்பு மாமியாராக நடிக்கும் குஷ்பு

சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ‘மாநாடு’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் சிம்பு நடிக்கும் முதல் அரசியல் படமாகும். இப்படத்தில் சிம்புவுக்கு நெகட்டிவ் கேரக்டர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மாநாடு படத்தை அடுத்து சுந்தர்.சி யின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். தெலுங்கில் வெளியான ‘அட்டரின்டிகி தரேதி’ திரைப்படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாக இருக்கிறது. பவண் கல்யாண், சமந்தா, பிரணிதா ஆகியோர் நடித்திருந்த இப்படத்தில் பவண் கல்யாண் மாமியாராக நதியா நடித்திருந்தார். தமிழில் இந்த வேடத்தில் சிம்புவின் மாமியாராக குஷ்பு நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com