பிக்பாஸ் பிரச்சினையை தீர்த்து வைத்த குஷ்பு

Kushboo

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த குஷ்பு, ரஜினிகாந்த், கமல் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்திருப்பதோடு, விஜய், அஜித் போன்ற தற்போதைய முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது சினிமா மற்றும் டிவி என்று தொடர்ந்து நடித்து வரும் குஷ்பு, திரைப்படம் மற்றும் சீரியல் தயாரிப்புகளிலும் பிஸியாக வலம் வருவதோடு, காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பிலும் இருந்து வருகிறார்.

இதற்கிடையே, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக சென்னையில் போடப்பட்டிருக்கும் பிரம்மாண்ட செட்டில் சுமார் 400 க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வரும் நிலையில், தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் குறைவானவர்களே அங்கு பணி புரிவதாக, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி புகார் தெரிவித்ததோடு, அந்த நிகழ்ச்சியில் இருந்து கமல் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். மேலும் பெப்சி சார்பாக போராட்டம் நடத்தப்போவதாகவும் அவர் அறிவித்தார்.

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் தலையிட்ட சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் நடிகை குஷ்பு, 24 மணி நேரத்தில் பிரச்சினையை தீர்த்து சுமூகமான முடிவை எட்டியுள்ளார். இதன் மூலம், பிக் பாஸ் நிகழ்ச்சி இனி எந்த பிரச்சினையும் இல்லாமல் நடைபெறும், என்று கூறிய ஆர்.கே.செல்வமணி குஷ்பு ஊரில் இல்லாததால் இந்த பிரச்சினை நீடித்தது. ஆனால் அவர் ஊரில் இருந்து வந்ததும் பிரச்சினை குறித்து விசாரித்து 24 மணி நேரத்தில் தீர்த்து வைத்ததாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன